_______________________________________________________________
நீரிழிவு நோயுடன் வாழ்வதும் ஆரோக்கியமாக வாழ்வதும் வெவ்வேறானவை அல்லது வித்தியாசமானவை அல்ல. உடல் பயிற்சி செய்வது, முறையான உணவுத் திட்டங்களை அனுசரிப்பது ஆகியவை எல்லாம், ஆரோக்கிய வாழ்க்கை விரும்பும் ஒரு சாதாரண மனிதரைப் போலத்தான் உங்களுக்கும். குணப்படுத்த முடியாவிட்டாலும் நீரிழிவு நோய் என்பதை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் நீங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
நோயைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்தக் குழுவில் நீங்கள் , உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உங்கள் டாக்டர் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கரை உடைய இதர மருத்துவ வல்லுனர்கள் இருப்பீர்கள். உங்கள் நலனிலும் உரிமைகளிலும் உறுதியாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு முழுப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு க்குழுவை அமைத்துக் கொள்வது கொஞ்சம் உபரிச் செலவையும் முயற்சியையும் உண்டாக்கும். இது உண்மைதான். ஆனால் நீங்கள் பெறப் போகும் நன்மைகள் அதிகம். உங்கள் முயற்சிகளை அவை ஈடுகட்டும்.
உங்கள் வயது 30க்கும் மேல் இருந்து நீங்கள் நீரழிவு நோயினால் தாக்கப்பட்டிருந்தால், உங்கள் கண்களை நீங்கள் அவசியம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் சோதித்துக் கொள்ள வேண்டும். உங்கள் வயது 12க்கும் 30 க்கும் நடுவில் இருந்தால், கடந்த 5 ஆண்டு காலமாக உங்களுக்கு நீரிழிவு இருந்திருந்தால், நீங்களும் ஒரு முழுமையான சோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.
- நன்றி ’ நீரிழிவுனோய்க் கட்டுப்பாடு’
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்